cricket

அவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றுவரும் நிலையில் இப்போட்டியின் போது அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீற்றர் சிடில் பந்தைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கை அணியின் முதலாவது இனிங்ஸின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களுடன் காணப்படும் போதே இது இடம்பெற்றுள்ளது.

போட்டியின் போது ஒளிபரப்பான காட்சிகளின் அடிப்படையில் பந்தினை பீற்றர் சிடில் தனது நகத்தைப் பயன்படுத்தி சேதப்படுத்துவது போன்று காணப்பட்டது. கிரிக்கெட் விதிகளின் படி இது தவறாகும்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க, அதுகுறித்த வீடியோ காட்சி தங்களிடம் காணப்படுவதாகவும், அனைவரும் அதைப் பார்வையிட முடியும் எனவும் தெரிவித்தார். அத்தோடு இதுகுறித்துப் போட்டி மத்தியஸ்தரிடம் அவர் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் முறையிட்டுள்ளார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபை, பந்தைச் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் ஊடக அறிக்கைகள் குறித்து போட்டி மத்தியஸ்தர் கிறிஸ் ப்ரோட் அறிவார் எனத் தெரிவித்துள்ளது. அத்தோடு இவ்விடயம் தொடர்பாக இலங்கைகிரிக்கெட் அணி இதுவரை உத்தியோகபூர்வ முறைப்பாட்டை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது.Image

பின்னூட்டமொன்றை இடுக